சூப்பரான சுவையில் கீரை வடை வீட்டிலேயே செய்ய ஈஸி ரெசிபி!
வடை என்றாலே தமிழ்நாட்டில் ரொம்ப பேமஸ். அதிலும் பல பகுதிகளில் கீரை வடை என்றால் பலருக்கு பேவரைட். சுவையான கீரை வடையை வீட்டிலேயே எப்படி செய்வது என பார்ப்போம்.
Various source
தேவையான பொருட்கள்: 1 கட்டு கீரை, உளுந்து – 200 கிராம், கடலைப் பருப்பு – 50 கிராம், பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், உப்பு,
முருங்கை, அரை கீரை, சிறு கீரை இவற்றில் ஏதாவது ஒன்றில் ஒரு கட்டு எடுத்து ஆய்ந்து நறுக்கிக் கொள்ள வேண்டும்.
கடலைப்பருப்பு, உளுந்தை நன்றாக ஊற வைத்து அரை பதத்திற்கு தண்ணீர் இல்லாமல் கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்
அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், சீரகம், இஞ்சி, கீரை, உப்பு சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ள வேண்டும்.
Various source
கடாயில் எண்ணெய் விட்டு உள்ளங்கையளவு மாவை எடுத்து உளுந்த வடை பல தட்டு நடுவே ஓட்டை போட்டு கடாயில் போட வேண்டும்.
இரு பக்கமும் வேகும் வரை திருப்பிப் போட்டு பொன்னிறமாக வரும்போது எடுத்தால் சுவையான கீரை வடை தயார்.