கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா சாம்பார் செய்வது எப்படி?

இட்லி, தோசைக்கு சட்னி, சாம்பார் போல கும்பகோணத்தில் செய்யப்படும் ஒரு சைட் டிஷ் வகைதான் கடப்பா சாம்பார். கெட்டியாக கிரேவில் போலவும், பூரி மசாலா போலவும் தெரியும் கடப்பா மிகவும் சுவையானது. கடப்பா சாம்பார் எப்படி செய்வது என பார்க்கலாம்.

Various Source

தேவையான பொருட்கள்: பாசிப்பருப்பு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், கொத்தமல்லி, உப்பு தேவையான அளவு

அரைக்க, தாளிக்க: தேங்காய் துறுவியது, பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி, சோம்பு, கடுகு, பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, கறிவேப்பிலை

ஒரு குக்கரில் தண்ணீர் சேர்த்து அரை கப் பாசிப்பருப்பு, இரண்டாக வெட்டிய உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து 5 விசில் வரும் வரை வேக விடவும்

உருளைக்கிழங்கு நன்றாக வெந்து வந்தபின் நன்றாக மசித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

Various Source

தேங்காய் துறுவல், கசக்கசா, சோம்பு, 4 பல் பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாயை தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய், நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை, உப்பு சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

பின்னர் அதனுடன் அரைத்த தேங்காய் மசாலாவை சேர்த்து தண்ணீர் ஊற்றி 5 நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.

நன்றாக கொதித்ததும், அதனுடன் வேக வைத்த பாசிப்பருப்பு, மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் கடப்பா தயார்.

Various Source

காரம் புளிப்புடன் சுவையான பச்சை மாங்காய் ஊறுகாய் செய்முறை!

Follow Us on :-