காரம் புளிப்புடன் சுவையான பச்சை மாங்காய் ஊறுகாய் செய்முறை!

மாங்காய் என்றாலே சீசனில் அதிகம் பலரும் விரும்பும் ஒன்றாகும். பச்சை மாங்காயில் செய்யப்படும் ஊறுகாய் உணவு வகைகளோடு வைத்து சாப்பிட சூப்பரான ஒன்று. காரம் புளிப்பு கலந்த சுவையான பச்சை மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: மாங்காய், மிளகாய் தூள், உப்பு, கடுகு, வரமிளகாய், கறிவேப்பிலை, எண்ணெய்

பெரிய மாங்காயாக எடுத்து கழுவி கட்டம் கட்டமாக சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் மிளகாய் தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ள வேண்டும்.

ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் கிள்ளிப்போட்டு தாளிக்க வேண்டும்.

Various Source

இந்த தாளித்த கலவயை மாங்காயில் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு நன்றாக ஊறும் வரை வைத்தால் சுவையான பச்சை மாங்காய் ஊறுகாய் தயார்.

வெயில்காலங்களில் தயிர்சாதம், ரசம் சாதம் போன்றவை சாப்பிடும்போது இந்த பச்சை மாங்காய் ஊறுகாய் சைட் டிஷ்ஷாக அருமையாக இருக்கும்.

பாசிப் பயறு தரும் அளவற்ற ஆரோக்கிய பயன்கள்..!

Follow Us on :-