இந்த நாளில் கிருஷ்ணரின் சிலை அல்லது படத்திற்கு பழங்கள், மலர்கள், இனிப்பு பலகாரங்கள், வெண்ணெய் படைத்து வழிபட வேண்டும்.
படைக்கப்படும் பலகாரத்தில் திரட்டுப் பாலுக்கு முக்கிய இடமுண்டு. இதை எப்படி செய்ய வேண்டும் என பார்ப்போம்…
திரட்டுப் பால் செய்ய தேவையானவை: பால் – 1 லி, வெல்லம் – 300 கி, ஏலக்காய்த் தூள் – ஒரு ஸ்பூன், முந்திரிபருப்பு – 7, நெய் – தேவைக்கு ஏற்ப
Webdunia
செய்முறை: 1. மிதமான தீயில் அடி கனமான பாத்திரத்தில் பாலை சேர்த்து இது மூன்றில் ஒரு பங்கு வரும் வரை சுண்ட காய்ச்ச வேண்டும்.
2. பிறகு இதனுடன் 300 கி வெல்லத்தை சேர்த்து, அதன் பின் ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக திறண்டு வரும் வரை கிளற வேண்டும்.
Webdunia
3. பால் கெட்டியாக சுருண்டு வந்தருக்கும் பதத்தில் சிறிது நெய் சேர்த்து, நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து இறக்கினால் சுவையான திரட்டுப் பால் ரெடி.
பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து அரைமணி நேரம் ஊறவைத்து, தேங்காய் துருவல் சேர்த்து விழுதாக அரைத்து, இதனுடன் வெல்லம் சேர்த்து நன்கு கிளற நெய், முந்திரி போட்டு இறக்கினால் தேங்காய் திரட்டுப் பால் ரெடி.