குழந்தைகளுக்கு பிடித்த வெஜ் மோமோஸ் வீட்டிலேயே எளிதாக செய்யலாம்!

காலத்திற்கேற்ப குழந்தைகளின் உணவு ரசனையும் மாறுபடுகிறது. அந்த வகையில் தற்போதுள்ள குழந்தைகளுக்கு மோமோஸ் உணவு பிடித்தமானதாக இருக்கிறது. இந்த மோமோஸை எளிதாக வீட்டிலேயே செய்யலாம். வெஜ் மோமோஸ் செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: மைதா, முட்டைக்கோஸ். கேரட், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு, சோயா சாஸ், மிளகு தூள், உப்பு

முட்டைக்கோஸ், கேரட், வெங்காயம், பச்சை மிளகாயை பொடிபொடியாக நறுக்கி லைட்டாக வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மைதா மாவை சுடுதண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பிசைந்த மாவை எலுமிச்சை பழம் அளவு எடுத்து எண்ணெய் தடவி பூரி கட்டையால் சப்பையாக தேய்த்துக் கொள்ள வேண்டும்.

நறுக்கி வறுத்து வைத்த காய்கறி கலவையை அதில் வைத்து மோமோஸ் டிசைனில் மூடிக் கொள்ள வேண்டும்.

இட்லி பானையில் அவற்றை வைத்து 10 நிமிடம் வரை வேகவைத்து எடுத்தால் சுவையான வெஜ் மோமோஸ் தயார்.

சுவையான சத்துமிக்க கம்பு இடியாப்பம் செய்வது எப்படி?

Follow Us on :-