சுவையான சத்துமிக்க கம்பு இடியாப்பம் செய்வது எப்படி?

இடியாப்பம் சுவையான எளிதில் ஜீரணமாக கூடிய சத்தான உணவு. இடியாப்பத்தை கோதுமை, கம்பு, தானியங்கள் உள்ளிட்ட பல வகைகளில் செய்ய முடியும். கம்பு இடியாப்பம் செய்வது எப்படி என பார்க்கலாம்.

Various Source

தேவையான பொருட்கள்: கம்பு மாவு – 1 கப், அரிசி மாவு – அரை கப், தண்ணீர், நல்லெண்ணெய், உப்பு தேவையான அளவு

வெறும் வாணலியில் கம்பு மாவை கொட்டி நன்றாக வாசம் வரும்வரை வறுத்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் அரிசி மாவு, உப்பு சேர்த்து நன்றாக கிளறிக் கொள்ள வேண்டும்.

ஒரு கப் சுடு தண்ணீர் மாவில் ஊற்றி நன்கு பிசைந்து விட்டு 10 நிமிடங்கள் மூடி வைக்க வேண்டும்.

Various Source

பின்னர் நல்லெண்ணெய் 4 ஸ்பூன் சேர்த்து நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.

பிசைந்த மாவை இடியாப்ப அச்சில் வைத்து இட்லி தட்டில் பிழிந்து இட்லி சுடுவது போல சுட்டு எடுத்தால் சுவையான கம்பு இடியாப்பம் தயார்.

சூப்பரான டேஸ்ட்டான பிரட் அல்வா செய்வது எப்படி?

Follow Us on :-