காளானை எப்படி பயன்படுத்த கூடாதுனு தெரியுமா??

காளானில் அதிக நன்மைகள் இருந்தாலும் அதனை தவறாக பயன்படுத்தினால் விஷமாக மாறக்கூடும். இதை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்...

Social Media

காளானை சுத்தப் படுத்தும் முன்பு அதனை சுத்தப்படுத்தும் நீரில் எலுமிச்சை சாறை பிழிந்தால் காளான் கருப்பாகாது.

பொதுவாக பாக்கெட்டில் வாங்கிய காளானை மூன்று நாட்கள் வரை ஃப்ரிஜ்ஜில் வைத்து உபயோகப் படுத்தலாம்.

அதிக நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக காளானை ஃப்ரீசரில் வைக்கக் கூடாது.

காளானை பாதி அளவு எடுத்து உபயோகப் படுத்தி விட்டு மறுநாள் மீதியை பயன்படுத்தலாம்.

பிரிக்காத காளானை மூன்று நாள் வரை வைத்து உபயோகப் படுத்தலாம்.

காளான் பிசுபிசுப்பாக மாறினால் உபயோகப் படுத்தக்கூடாது.

காளான் தாய்ப்பாலை வற்ற வைக்கும் என்பதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதை தவிர்க்கலாம்.

Social Media

காளானில் பியூரின் சத்து இருப்பதால் கீல்வாதம் உள்ளவர்கள் அதிகம் சேர்ப்பதைத் தவிர்க்க வேண்டும்.

Social Media

சரும அலர்ஜி பிரச்சினைகள் இருப்பவர்கள் காளானை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

Social Media

தளதளனு குக்கரில் பொங்கல் செய்வது எப்படி?

Follow Us on :-