தளதளனு குக்கரில் பொங்கல் செய்வது எப்படி?

பொங்கலை குக்கரில் செய்யும் போது அது ஆறியதும் இறுகிவிடும். அப்படி இறுகாமல் தளதளனு பொங்கல் செய்வது எப்படி?

Social Media

தேவையான பொருட்கள்: பாசி பருப்பு - 1/2 கப், பச்சரிசி - ஒரு கப், மிளகு, சீரகம் - ஒரு ஸ்பூன், இஞ்சி - ஒரு துண்டு, பச்சைமிளகாய் - 1, பெருங்காயம், நெய், உப்பு - தேவையான அளவு

செய்முறை: அடுப்பில் கடாய் வைத்து அது சூடானதும் அதில் அரை கப் அளவு பாசி பருப்பு சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.

பின்னர் வறுத்த பாசி பருப்புடன் ஒரு கப் பச்சரிசி சேர்த்து 2 - 3 முறை அலசி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

அடுப்பில் ஒரு பெரிய குக்கர் வைத்து அதில் ஊறவைத்த அரிசி மற்றும் பருப்பு கலவையை சேர்த்து 4 ½ கப் தண்ணீர் சேர்க்கவும்.

குக்கரை மூடிவிட்டு மிதமான தீயில் 3 - 4 விசில் வரும் வரை அரிசி மற்றும் பருப்பு கலவையை வேகவிடவும்.

பொங்கல் வேகும் சமயத்தில் ஒரு கடாயில் நெய் ஊற்றி, அது காய்ந்ததும் மிளகு சீரகம், துருவிய இஞ்சி, நறுக்கிய பச்சை மிளகாய், பெருங்காயம் சேர்த்தால் தாளிப்பு ரெடி.

Social Media

இப்போது குக்கரை திறந்து பொங்கலை நன்கு மசித்து உப்பு சேர்த்து தாளிப்பையும் சேர்த்து கிளறினால் பொங்கல் ரெடி.

Social Media

குறிப்பு: அரிசி, பருப்புக்கு ஏற்றவாறு 3 மடங்கு தண்ணீரி சேர்க்க வேண்டும். பழைய அரிசி என்றால் கூடுதலாக அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.

Social Media

வெறும் வயிற்றில் இளநீர் குடிப்பது நல்லதா?

Follow Us on :-