வெயில் காலத்தில் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படாமல் பாதுகாப்பாக இருப்பது எப்படி?
தற்போது வெயில் பல பகுதிகளிலும் அதிகரித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெயிலால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வலிப்பு ஆபத்தானதாக உள்ளது. ஹீட் ஸ்ட்ரோக் வராமல் தற்காத்துக் கொள்வது எப்படி என தெரிந்துக் கொள்ளுங்கள்.
Various Source
வெயில் காரணமாக உடலில் உள்ள நீர்ச்சத்துக்கள் இழக்கப்படுவதுடன், உடல் 40 டிகிரி வெப்பநிலையை தாண்டும்போது ஏற்படும் வலிப்பு ஹீட் ஸ்ட்ரோக் எனப்படுகிறது
உச்சி வெயில் நேரங்களில் வெளியே பயணிப்பதை தவிர்ப்பது நல்லது. அதிகமாக தண்ணீர் அருந்த வேண்டும்.
இளநீர், மோர் போன்ற பானங்களை பருகி அடிக்கடி உடலில் நீர்ச்சத்து தொடர்ந்து இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெயிலில் எங்காவது வெளியே செல்ல வேண்டிய தேவை இருந்தால் தலைக்கு தொப்பி, குடை போன்றவற்றை எடுத்து செல்ல வேண்டும்.
பெரியவர்கள், குழந்தைகளை ஹீட் ஸ்ட்ரோக் எளிதில் தாக்கும் அபாயம் உள்ளது. அதனால் குழந்தைகள் வெயிலில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும்
குழந்தைகள் ஒரு நாளைக்கு இரு முறை குளிக்க வேண்டும். வேர்க்குரு போன்ற பாதிப்புகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வெயில் காரணமாக தொடர் மயக்கம், தலைச்சுற்றல் ஏற்பட்டால் உடனடியாக அருகே உள்ள மருத்துவரை அணுகுவது நல்லது.