சுவையான ஆரோக்கியமான பச்சைப்பயறு மசியல் ஈஸியா செய்யலாம்!

பயறு வகைகளில் மிகவும் சத்து வாய்ந்தது பச்சைப்பயறு. இதைக் கொண்டு சுண்டல், குழம்பு என பல வகை உணவுகளையும் செய்து அசத்தலாம். பச்சைப்பயறு மசியல் எளிதாக செய்வது எப்படி என பார்க்கலாம்.

Various Source

தேவையான பொருட்கள்: பச்சைப்பயறு, வெங்காயம், தக்காளி, மிளகாய், பூண்டு, இஞ்சி, சீரகம், மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், சீரக தூள்

பச்சை பயறை நன்றாக கழுவி குக்கரில் வைத்து தண்ணீர் ஊற்றி 4 விசில் வரும் வரை வேகவைக்க வேண்டும்

கடாயை வைத்து எண்ணெய் விட்டு சீரகம், நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.

பின்னர் அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், தனியா தூள், சீரக தூள், கரம் மசாலா சேர்த்துக் கிளற வேண்டும்.

Various Source

பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக கிளறிவிட்டு பச்சை பயறை அதில் சேர்க்கவும்

பச்சை பயறை தண்ணீர் கொஞ்சம் சேர்த்து நன்றாக மசித்துவிட்டு உப்பு சேர்த்து கிளற வேண்டும்.

மிதமான சூட்டில் 10 நிமிடங்கள் வைத்து எடுத்து கொத்தமல்லி இலை தூவினால் கமகமக்கும் பச்சைப்பயறு மசியல் தயார்.

சிவக்க சிவக்க சூப்பரான பீட்ரூட் ரசம் வைப்பது எப்படி?

Follow Us on :-