கொசு தொல்லை இல்லாத வீடுகளே இருக்க முடியாது. என்னதான் கொசுவர்த்தி, ரிப்பல்லண்டுகள் பயன்படுத்தினாலும் அந்த கெமிக்கல்கள் உடலுக்கு தீங்கு விளைவிக்கலாம். இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டுவது எப்படி என பார்ப்போம்.
Various source
மழைக்காலங்களில் பல பகுதிகளிலும் நீர் சேர்வதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது.
கொசுக்களால் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.
வீடுகளில் கொசுக்களின் நடமாட்டத்தை குறைக்க கொசுவர்த்தி போன்ற கெமிக்கல் பொருட்களை பயன்படுத்துவது பாதிப்பை ஏற்படுத்தலாம்.
கிராமங்களில் கொசுக்களை விரட்ட காய்ந்த மாட்டு சாண வரட்டியை வைத்து மூட்டம் போடுவார்கள்.
Various source
சிட்ரோனெல்லா எண்ணெய்யை சருமத்தில் தடவிக் கொள்வது கொசுக்களை அண்ட விடாது.
Various source
சாம்பிராணி புகை கொசுக்கள் மற்றும் சிறிய பூச்சியினங்களை விரட்ட உதவும்.
யூகலிப்டஸ் எண்ணெய் வாசனை கொசுக்களுக்கு ஆகாது என்பதால் அதை பயன்படுத்தலாம்.