உகாதி ஸ்பெஷல் அறுசுவை பச்சடி செய்யலாம் வாங்க!

உகாதி பண்டிகை தெலுங்கு புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சகலமும் நலமாக தொடங்க மக்கள் உகாதி பச்சடி செய்து சாப்பிடுகின்றனர். அறுசுவை கொண்ட இந்த உகாதி பச்சடியை எப்படி செய்வது என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: மாங்காய், புளி கரைசல், உப்பு, மிளகாய் தூள், வெல்லம், வேப்பம் பூ, வெள்ளரிக்காய், முலாம்பழம் விதை,

மாங்காய் மற்றும் வெள்ளரிக்காயை பொடிப்பொடி துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்

வேப்பம் பூவை தண்ணீரில் 10 நிமிடம் ஊறவிட்டு அலசி எடுத்துக் கொள்ள வேண்டும்.

புளியை தண்ணீரில் கரைத்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்

Various Source

பின்னர் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய மாங்காய், புளிச்சாறு, வெல்லம், பச்சை மிளகாய், வெள்ளரிக்காய் மற்றும் வேப்பம்பூவுடன் உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.

பிறகு அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலக்கினால் அறுசுவை தரும் உகாதி பச்சடி தயார்.

இரவில் நிம்மதியாக தூங்கணுமா? இந்த டிப்ஸை படிங்க!

Follow Us on :-