இரவில் தூக்கமின்மை என்பது தற்போதைய தலைமுறையில் பிரச்சினையாக மாறி வருகிறது. சரியான தூக்கம் இல்லாமல் போவது உடல்நல பிரச்சினைகளையும் தருகிறது. இரவில் நிம்மதியாக தூங்க எளிய டிப்ஸ் உங்களுக்காக..
Various Source
தினமும் ஒரே நேரத்தில் படுத்து ஒரே நேரத்தில் விழித்தெழ பழகினால், தானாகவே அந்த நேரத்திற்கு தூக்கம் பழகிவிடும்.
இரவு நேரத்தில் நல்ல தூக்கம் வர அசைவங்களை தவிர்த்து காய்கள், பழங்கள், பருப்பு உணவுகளை எடுக்கலாம்.
இரவு படுக்க செல்லும் முன் சிறிது நிமிடங்கள் யோகா அல்லது தியானம் செய்வதால் நல்ல தூக்கத்தை பெறலாம்.
காஃபைன் நிறைந்த டீ, காபி போன்றவற்றை மாலை 5 மணிக்கு மேல் குடிப்பதை தவிர்த்தால் நல்ல தூக்கத்தை பெறலாம்.
Various Source
உறங்க செல்லும்போது செல்போன்களில் ரீல்ஸ் பார்ப்பதை தவிர்த்து மூளைக்கு ஓய்வு அளித்தால் உறக்கம் எளிதாக வரும்.
உறங்க செல்லுகையில் ஸ்மார்ட்போன் பார்ப்பதற்கு பதில் மன அமைதி தரும் புத்தகங்களை படிப்பது நல்லது.
உறங்கும் முன் அறை உடலுக்கு ஏற்றவாறு குளிர்ச்சியாக இருக்குமாறு வைத்துக் கொண்டால் தூக்கம் எளிதில் வரும்.
தூக்கம் வராவிட்டால் பாடல்களை Sleeping Time செட் செய்து இனிமையான இசையை கேட்பது தூக்கத்தை அளிக்கும்.