வீட்டிலேயே எளிதாக சாஃப்ட் பன்னீர் செய்வது எப்படி என இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளுங்கள்...
Social Media
தேவையான பொருட்கள்: பால் - 6 கப், தயிர் - 1/4 கப்
செய்முறை: அடி கனமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். முடிந்த வரை புதிய பாலை பயன்படுத்துவது பன்னீருக்கு நல்ல சுவை கொடுக்கும்.
பால் கொதித்த உடன் அடுப்பை அணைத்து 1/4 கப் தயிர் சேர்த்து 1 நிமிடம் வரை கைவிடாமல் நன்றாகக் கிளறி விடவும்.
பால் திரிந்ததும் வேறு ஒரு பாத்திரத்தில் மஸ்லின் துணியை பயன்படுத்தி திரிந்த பாலை வடிகட்டவும்.
பன்னீரில் உள்ள அதிகப்படியான தண்ணீரை பிழிந்து, ஒரு முடிச்சை போட்டு 30 நிமிடங்கள் வரை தண்ணீர் வடிய தொங்கவிடவும்.
பின்னர் ஒரு தட்டையான வடிகட்டியில் துணியோடு பன்னீரை வைத்து, குறைந்தது 3 கிலோ எடையுள்ள ஒரு கனமான பொருளை சுமார் 3 நேரம் வரை அதன் மேல் வைக்கவும்.
Social Media
குறிப்பிட்ட மணி நேரத்திற்கு பிறகு துணியில் இருந்து பன்னீரை எடுத்து சமையலுக்கு பயன்படுத்தலாம்.
Social Media
குறிப்பு: 1. பாலில் தயிர் அல்லாமல் எலுமிச்சை சாறு, வினிகர் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.
2. வினிகர் அல்லது எலுமிச்சை சாறு பயன்படுத்தினால் அதன் வாசனை போக வடிகட்டியதும் குளிர்ந்த நீரை அதன் மீது ஊற்றவும்.