செய்முறை: அடுப்பில் ஒரு அடிகன பாத்திரத்தை வைத்து காய்ந்த மிளகாய், தனியா, துவரம் பருப்பு, கடலைப் பருப்பு, உளுந்து, அரிசி, சீரகம், மிளகு மற்றும் வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியாக மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
Social Media
வறுத்து எடுத்த பொருட்கள் ஆறிய பின், எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து ஒரு மிக்ஸியில் போட்டு கொற கொறவென அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
பின்னர் இதனுடன் பெருங்காயம், மஞ்சள் தூள், காய்ந்த கருவேப்பிலை சேர்த்து நன்கு பொடியாக அரைத்து எடுத்தால் சாம்பார் பொடி ரெடி.
சாம்பார் பொடியை ஒரு ஏர் டை கண்டெய்னரில் போட்டு எடுத்து வைத்தால் நீண்ட நாட்களுக்கு கெடாமலும் வாசனை குறையாமலும் இருக்கும்.
Social Media
தயார் செய்த சாம்பார் பொடியை சாம்பார் வைத்து முடித்ததும் கடைசியாக தேவைக்கேற்ப தூவி ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி, நெய் விட்டு இறக்கவும்.