நெய் மணக்க மணக்க ரவா கிச்சடி செய்வது எப்படி?

காலை டிபனாக நிமிடங்களில் ஏஸியாக ரவையை வைத்து கிச்சடி செய்வது எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்...

Social Media

தேவையான பொருட்கள்: வெங்காயம் - 1, தக்காளி - 1, கேரட் , பீன்ஸ் - 1, ரவை - 1 கப், உளுந்தம் பருப்பு - 1 டீ ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - 1 துண்டு

கருவேப்பிள்ளை, கொத்துமல்லி, எலுமிச்சை சாறு, சிட்டிகை சர்க்கரை, உப்பு, தண்ணீர், எண்ணெய், நெய்

செய்முறை: கடாய் எடுத்து அதில் சிறிது நெய் விட்டு ரவையை சேர்த்து நிறம் மாறாத வகையில் வறுத்து எடுத்துக்கொள்ளவும்.

அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு, கருவேப்பிள்ளை, நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் தக்காளி சேர்த்து வதக்கவும்.

வெங்காயம், தக்காளி வதங்கியதும் அதில் பச்சை பட்டாணி, உருளை கிழங்கு, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளைஉங்களுக்கு பிடித்த அளவில் சேர்த்துக்கொள்ளவும்.

Social Media

காய்கறிகளில் சற்று வதங்கியதும் ரவையை சேர்த்து பின்னர் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கொத்தமல்லியை தூவி வேகவிடவும்.

Social Media

ரவை வெந்ததை உறுதிப்படுத்திக்கொண்டு சிறிது நெய் விட்டு கிளறினால் சூப்பரான ரவா கிச்சடி ரெடி.

Social Media

குறிப்பு: ரவை அளந்து எடுத்த கப்பில் இரண்டு மடங்கு அதிகமாக தண்ணீர் எடுக்க வேண்டும். அதாவது 1:2 விகிதம்.

Social Media

பீன்ஸ் இத்தனை நன்மைகளை தருமா??

Follow Us on :-