குவிக் அண்ட் ஈஸி பிரெட் தோசை செய்வது எப்படி?

பிரெட் வைத்து பல வெரைட்டி ஸ்னாக் செய்யலாம் என்ற நிலையில் தோசை செய்வது எப்படி என பார்க்கலாம்....

Webdunia

தேவையான பொருட்கள்: பிரெட் – 10 துண்டுகள், அரிசி மாவு – 1/2 கப், ரவை – 1/2 கப், வெங்காயம், தக்காளி, கேரட், பச்சை மிளகாய் – 1,

மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன், தயிர் – 1/2 கப், உப்பு – தேவையான அளவு

பிரெட் துண்டுகளை மிக்ஸியில் போட்டு அரைத்துக்கொள்ளவும். இதனை ஒரு பாத்திரத்தில் மாற்றி இதனுடன் அரிசி மாவு, ரவை சேர்த்து கலக்கவும்.

பின்னர் இதனுடன் தயிர் தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் கலந்து தோசை மாவு பதத்திற்கு கொண்டுவரவும்.

அடுத்து இதனுடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், துருவிய கேரட், மிளகாய் தூள் சேர்த்து கலந்துகொள்ளவும்.

Webdunia

மாவு ரெடியான நிலையில் வழக்கமாக தோசை ஊற்றுவது போல ஊற்றி எடுத்து பரிமாறவும்.

Webdunia

குவிக் அண்ட் ஈஸி பிரெட் தோசை

நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் தவிர்க்க கூடாத காய்கள்!

Follow Us on :-