அன்னாசி ரசம் வைப்பது எப்படி?

மிளகு ரசம், தக்காளி ரசம் வைத்து போர் அடிக்குதா இதோ புதுசா அன்னாசி ரசம் எப்படி செய்யனும்னு தெரிஞ்சிக்கோங்க...

Social Media

தேவையான பொருட்கள்: அன்னாசி - 2 துண்டுகள், பெரிய தக்காளி - 1, மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், மிளகு - 1/2 டீஸ்பூன், சீரகம் - 1/2 டீஸ்பூன்,

பச்சை மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை, கடுகு, வரமிளகாய், பெருங்காயத் தூள், எண்ணெய், தண்ணீர், உப்பு

செய்முறை: அன்னாசி துண்டுகளை மிக்சர் ஜாரில் போட்டு நன்கு மைய அரைத்து திப்பிகளின்றி வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளவும்.

பின்னர் அதே மிக்சர் ஜாரில் சீரகம், மிளகு மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை போட்டு அரைத்து எடுத்து வைக்கவும்.

இப்போது ரசம் வைக்க பாத்திரம் எடுத்து அதில் தக்காளி, மஞ்சள் தூள், அன்னாசி சாறு பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.

இதனை அடுப்பில் வைத்து சூடானதும் அரைத்து வைத்த மிளகு சீரக கலவையை சேர்த்து 5 - 7 நிமிடம் நன்கு கொதிக்கவிடவும்.

Social Media

இந்த நேரத்தில் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிள்ளை, வரமிளகாய், பெருங்காயம், சிறு துண்டுகளாக கொஞ்சம் அன்னாசி, தக்காளி போட்டு வதக்கவும்.

Social Media

பச்சை வாசனை போனதும் கொதித்து முடித்த ரசத்தை இதனுடன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கொத்தமல்லி தூவி இறக்கினால் அன்னாசி ரசம் ரெடி.

Social Media

காளானை எப்படி பயன்படுத்த கூடாதுனு தெரியுமா??

Follow Us on :-