பண்டிகை நாட்கள் வருவதால் இனிப்புகளுக்கு முக்கிய பங்கு உண்டு. எனவே சுவையான பருப்பு போளி செய்வது எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்...
Social Media
தேவையான பொருட்கள்: கடலை பருப்பு - ஒரு கப், உப்பு - 1/4 ஸ்பூன், வெல்லம் - 1 1/2 கப், தண்ணீர் - 1/4 கப், மைதா மாவு - 2 கப், மஞ்சள் - ஒரு சிட்டிகை, உப்பு - 1/4 ஸ்பூன், நெய் & எண்ணெய் - தேவையான அளவு
Social Media
செய்முறை : மைதா மாவை சலித்து அத்துடன் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு, சப்பாத்தி மாவு போல பிசையவும். இதனை அரை மணி நேரம் மூடிவைக்கவும்.
Social Media
அரை மணி நேரத்திற்கு பிறகு நல்லெண்ணெய் சேர்த்து, எண்ணெய் முழுவதும் மாவுடன் உறிஞ்சிக் கொள்ளும் வரை பிசையவும். இதன 2 மணி நேரம் மூடி வைக்கவும்.
Social Media
கடலைப் பருப்பில் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 1 விசில் வரும் வரை வேக வைக்கவும். வெந்த பிறகு தண்ணீரை முழுவதும் வடித்துவிட்டு துறுவிய வெல்லம், ஏலக்காய் சேர்த்து மிக்ஸியில் அரைத்து உருண்டைகளாக செய்யவும்.
Social Media
பிசைந்த மாவிலிருந்து சிறிய உருண்டைகள் செய்து கைகளால் தட்டி சிறிய சப்பாத்தி போல அதன் மேல் பூரண உருண்டை வைத்து மூடி மறுபடியும் உருண்டை செய்யவும்.
Social Media
வாழையிலையில் எண்ணெய் தடவி உருண்டையை வைத்து கைகலால் தட்டி தட்டி மெல்லிய போளியை தயாரிக்கவும். பின்னர் தோசைக்கல்லில் நெய் ஊற்றி இருபுறமும் பதமாக வெந்ததும் போளி ரெடி.
Social Media
குறிப்பு: 1. ஒவ்வொரு போளியையும் சுட்ட பிறகு ஒன்றின் மேல் ஒன்றாக வைக்காமல், தனித் தனியே வைக்கவும்.
Social Media
2. அரைத்த கடலை மாவு தளர்ந்து இருந்தால் வெறும் வாணலியில் போட்டு சூடாக்கி விடாமல் கிளறி சிறிது கெட்டிப்பட்டதும் இறக்கவும்.