சுவையான நெய் மைசூர் பாக்-கை வீட்டிலேயே செய்வது எப்படி என தெரிந்துக்கொள்ளுங்கள்...
Social Media
தேவையான பொருட்கள்: கடலை மாவு - 1 கப், எண்ணெய் - 3/4 கப், நெய் - 3/4 கப், சர்க்கரை - 1 கப், தண்ணீர் 1/2 கப்
செய்முறை: ஒரு வாணலியில் நெய் மற்றும் எண்ணெயை ஊற்றி லேசாக சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதில் பாதியை ஒரு பாத்திரத்தில் ஊற்றி தனியாக எடுத்து வைக்கவும்.
மீதமுள்ள பாதி எண்ணெய் நெய் கலவையை 1 கப் கடலை மாவில் ஊற்றி கட்டிகளின்றி நன்கு மென்மையாக கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து ஒரு அகலமான வாணலியில் 1 கப் சர்க்கரை மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, கம்பி பதத்திற்கு வரும் வரை சூடேற்ற வேண்டும்.
சர்க்கரை பாகு கம்பி பதத்திற்கு வந்ததும், அதில் கரைத்து வைத்துள்ள கடலை மாவை சேர்த்து நன்கு தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
Social Media
கடலை மாவானது கெட்டியாக ஆரம்பிக்கும் போது, அதில் எடுத்து வைத்துள்ள எண்ணெய் நெய் கலவையை சேர்க்கவும்.
Social Media
மிதமான தீயில் வைத்து கிளற வேண்டும். கடலை மாவு வாணலியில் ஒட்டாமல் வரும் போது, அடுப்பை அணைத்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.
Social Media
இறுதியாக ஒரு பாத்திரத்தில் நெய்யை தடவி, அதில் இந்த கடலை மாவை ஊற்றி பரப்பி, 1 மணிநேரம் குளிர வைக்கவும்.
Social Media
பின்னர் கத்தியில் நெய் தடவிக்கொண்டு தேவையான வடிவத்தில் துண்டுகளாக்கினால், சுவையான நெய் மைசூர் பாக் தயார்.