வீட்டில் ஆரோக்கிய பிரச்சினையை ஏற்படுத்தும் ஒரு ஜந்து பல்லி. பூச்சிகளை உணவாக கொள்ளும் பல்லிகள் தன் எச்சத்தை வீட்டு பகுதிகளில் இடுவதால் அது பல்வேறு சுகாதார கேடுகளை ஏற்படுத்துகிறது. பல்லிகளை வீட்டிலிருந்து விரட்டியடிக்க சில எளிய வழிமுறைகள் குறித்து காண்போம்.
Various Source
பல்லிகளை ஈர்க்கும் சிறிய பூச்சிகள், சிலந்திகள் போன்ற உயிரினங்கள் இல்லாத அளவு வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும்.
பல்லிகள் இருட்டான பகுதிகளில் வசிக்கக் கூடியவை. அலமாரியின் பின்பக்கம் போன்றவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
வீட்டில் உள்ள ஜன்னல் கதவுகள் மற்றும் திறப்புகளை பல்லிகள் வரமுடியாத படி மூடி வைக்க வேண்டும்.
பல்லிகள் நடமாடும் பகுதிகளில் கற்பூரம், பினாப்தலின் உருண்டைகளை வைத்தால் அவை ஓடி விடும்.
பூண்டு வாசனையை பல்லிகள் விரும்புவதில்லை. பல்லிகள் பதுங்கும் பகுதிகளில் பூண்டை வைக்கலாம்.
பூண்டு, கிராம்பு சேர்த்து அரைத்து தண்ணீர் சேர்த்து ஸ்பிரே செய்து வருவது நல்ல தீர்வை தரும்.
வீட்டில் மயில்தோகையை வைப்பது பல்லிகளை விரட்ட மற்றுமொரு எளிய வழியாகும்.