வீட்டில் கரப்பான்பூச்சிகளை ஒழித்து கட்டுவது எப்படி?

வீட்டு சமையலறைகளில் திரியும் கரப்பான்பூச்சிகள் ஆரோக்கியத்திற்கு கேடு தரக்கூடியவை. கரப்பான்பூச்சிகளின் புழக்கத்தால் பல்வேறு நோய்கள் மனிதர்களை தாக்கும் வாய்ப்புள்ளது. கரப்பான்பூச்சிகளை விரட்ட சில எளிய வழிமுறைகளை அறிவோம்.

Various Source

கரப்பான் பூச்சிகள் புழக்கத்தால் மனிதர்களுக்கு டைபாய்டு காய்ச்சல், தொற்று வியாதிகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

பேக்கிங் சோடாவில் சர்க்கரை தண்ணீர் கலந்து கரப்பான் பூச்சிகள் வரும் பகுதிகளில் தெளிக்க அவற்றின் நடமாட்டம் குறையும்.

மண்ணெண்ணெய்யை கரப்பான் பூச்சிகள் உள்ள இடுக்குகளில் ஸ்ப்ரே செய்து வர கரப்பான் பூச்சிகள் ஓடிவிடும்.

பலா இலையை பொடியாக அரைத்து கரப்பான் பூச்சிகள் உள்ள இடங்களில் தூவியும் கரப்பானை விரட்டலாம்

Various Source

கரப்பான் பூச்சிகள் வெளிச்சம் படாத இடத்தில் வாழும். எனவே வீட்டில் உள்ள வெடிப்புகள், சிறு துளைகளை அடைத்து விடுவது நல்லது.

பெப்பர்மிண்ட் ஆயிலுடன் உப்பு, தண்ணீர் கலந்து வீட்டில் தெளித்து வந்தால் கரப்பான் பூச்சிகள் அகலும்.

கிராம்புகளை பொடியாக்கி கரப்பான் பூச்சிகள் மறைந்திருக்கும் இடுக்கு பகுதிகளில் தூவலாம்.

உப்பு அதிகம் சேர்த்தால் மூளை வேலை செய்யாதா?

Follow Us on :-