கறுப்பு உதடுகள் சிவக்க சில மருத்துவ குறிப்புகள்..!
உதடுகள் கறுத்துப் போவது முக அழகை குறைப்பதாக உள்ளது. இயற்கையான மருத்துவ முறைகள் மூலம் கறுத்த உதடுகளை சிவப்பாகவும், பொலிவாகவும் மாற்ற முடியும். அதற்கான சில முறைகள்..
Various Source
வெப்பம், தூசு, காஃபைன், போன பல காரணிகளால் பலருக்கு உதடுகள் கறுத்து போகிறது.
எலுமிச்சை சாறில் சர்க்கரை சேர்த்து உதடுகளில் 10 நிமிடம் மசாஜ் செய்து குளிர்ந்த நீரால் கழுவினால் கறுப்பு மறையும்.
பாதாம் எண்ணெய்யை அவ்வபோது உதடுகளில் தடவி வந்தால் உதட்டில் உள்ள கறுப்பு நீங்கும்.
மாதுளை சாறை இரவு தூங்கும் முன் உதடுகளில் தடவி ஊற வைத்து கழுவினால் உதடுகள் சிவப்பாகும்.
Various Source
வெட்டிய எலுமிச்சை பழத்தை உதடுகளில் தடவி வர உதடு கறுத்தல், வறண்டு போகும் பிரச்சினைகள் நீங்கும்.
Various Source
நெல்லிக்காய் சாறை உதடுகளில் தடவி வந்தால் கறுப்பு மறைவதுடன், உதடுகள் நீர்மையுடன் பொலிவாக தோன்றும்.
Various Source
ஜாதிக்காயை அரைத்து உதடுகளில் தடவி வர கறுப்பு மறைந்து பொலிவு பெறும்.