உடல் சூட்டை குறைக்கும் அற்புதமான கிராம வைத்தியம்..!
வெயில் காலம் தொடங்கியுள்ள நிலையில் உடல்சூடு பெரும் பிரச்சினையாகிறது. எளிய கிராம வைத்திய முறைகள் மூலம் உடல்சூட்டை குறைப்பதுடன், அதனால் ஏற்படும் பிரச்சினைகளையும் தீர்க்கலாம்.
Various Source
உடல்சூடு தணிக்க தண்ணீர் அதிக அளவு குடிக்க வேண்டும். கால்களை தண்ணீரில் நனையும்படி வைத்திருப்பதும் நல்லது.
கோடைக்காலத்தில் தினம் ஒரு கிளாஸ் மாதுளை ஜூஸ் குடிப்பது உடல்சூட்டை தணிக்கும்.
தினம் காலை ஒரு ஸ்பூன் வெந்தயத்தை வாயில் போட்டு தண்ணீர் குடித்தால் உடல்சூடு பிரச்சினைகள் வராது.
வெதுவெதுப்பான பாலில் தேன் கலந்து குடித்து வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்க உதவும்.
Various Source
சந்தனம் குளிர்ச்சி மிக்கது. சந்தனப்பொடியை உடலில் தடவி கழுவி வந்தால் உடல்சூடு வெகுவாக குறையும்.
Various Source
உடல்சூட்டை குறைக்க மோர் சிறப்பான பானம். இதில் உள்ள விட்டமின்கள் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
கோடையில் ஏற்படும் உடல் வறட்சி மற்றும் தாகத்தை போக்கவும், குளிர்ச்சியளிக்கவும் இளநீர் அற்புதமான பானம்.
கற்றாழையை மோர் அல்லது தண்ணீரில் போட்டு குடிப்பதும் உடல் சூடை குறைக்க நல்ல மருந்து.