இன்றைய காலத்தில் துரித உணவுகளில் அதிகம் பயன்படுத்தும் பொருளாக மயோனைஸ் உள்ளது. பலரும் விரும்பி சாப்பிடும் இந்த மயோனைஸ் தொடர்ந்து சாப்பிட்டால் உடல்நல பிரச்சினைகளையும் ஏற்படுத்தக்கூடும்.
Various Source
மயோனஸ் சாண்ட்விச், பர்கர், பார்பிக்யூ என பல துரித உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.
மயோனஸ் அதிகமாக எடுத்துக் கொண்டால் உடலில் சர்க்கரை அளவை அதிகரிக்கும்.
மயோனஸில் கலோரிகள் அதிகமாக உள்ளதால் உடலின் எடையை அதிகரிக்க செய்யும்.
மயோனஸில் கொழுப்பு அதிகமாக இருப்பதால் இரத்த அழுத்த பிரச்சினைகளை உண்டாக்கும்.
Various Source
மயோனஸ் உடலில் உள்ள கொலஸ்ட்ராலை அதிகப்படுத்துவதால் இதய நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
Various Source
மயோனஸில் செயற்கையான பொருட்களும் சேர்க்கப்படுவதால் தொடர்ந்து சாப்பிடுவது தலைவலி, குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தும்.
துரித உணவுகளையும், மயோனஸையும் குறைந்த அளவில் உண்பதும், பெரும்பாலும் தவிர்ப்பதும் உடல் நலத்திற்கு நல்லது.