வலிமை தரும் எள்ளு சாதம் எளிமையாக செய்யலாம்!

உடலை வலுவாக்கும் தானியங்களில் எள் முக்கியமானது. எள் கொண்டு பல பதார்த்தங்களும் செய்யலாம். எள்ளு சாதம் ஈஸியாக சுவையாக எப்படி செய்வது என பார்க்கலாம்.

Various source

தேவையான பொருட்கள்: எள்ளு, பச்சை மிளகாய், கடுகு, கறிவேப்பிலை, உப்பு, மஞ்சள் தூள், உளுந்து,

கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, கறிவேப்பிலையை தாளிக்கவும்.

பின்னர் அதில் பச்சை மிளகாயை பொடியாக கீறி சேர்க்கவும்.

அதன் பிறகு பொடியாக்கிய எள்ளு சேர்த்து சுருள வதக்க வேண்டும்.

பின்னர் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

தண்ணீர் வற்றியதும் அதை எடுத்து ஆறிய சாதத்தில் போட்டு கிளறினால் சத்துமிக்க எள்ளு சாதம் தயார்.

குதிகால் வெடிப்பை போக்க வீட்டுமுறை டிப்ஸ்!

Follow Us on :-