காலை எழுந்ததும் நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி கொப்பளிப்பது ஆயில் புல்லிங் எனப்படுகிறது. இது பல ஆண்டுகள் முன்பிருந்தே ஆயுர்வேத மருத்துவத்தில் உள்ளது. ஆயில் புல்லிங் செய்வதன் பயன்கள் குறித்து காண்போம்..
Various Source
ஆயில் புல்லிங் செய்வதால் ஈறுகளில் வீக்கம் குறைந்து ஈறுகள் வலுவடைகின்றன.
வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் தினசரி காலை 10 நிமிடங்கள் ஆயில் புல்லிங் செய்தால் துர்நாற்றம் குறையும்.
ஆயில் புல்லிங் செய்வதால் வாயில் உள்ள பாக்டீரியாக்கள் அழிந்து நோய்களில் இருந்து காக்கிறது.
ஆயில் புல்லிங் செய்வதால் பற்களில் ஒட்டு உணவு துணுக்குகள் அகன்று பற்சொத்தை தடுக்கப்படுகிறது.
Various Source
நல்லெண்ணெய்யில் ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் குளிர்ச்சி கண்களின் நரம்புகள் சீராக இயங்க உதவுகிறது.
ஆயில் புல்லிங் செய்வதால் உதடுகளுக்கு தேவையான எண்ணெய் தன்மை கிடைத்து உதடுகள் வறட்சி அடையாமல் இருக்கும்.
வெயில் காலங்களில் ஆயில் புல்லிங் செய்வதால் உடல்சூடு குறைந்து புத்துணர்ச்சி கிடைக்கும்.