தொடர்ந்து கோவைக்காய் சாப்பிட்டால் என்ன ஆகும் தெரியுமா?

இயற்கையாகவே புதர்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் முளைவிடும் கோவைக்காயில் இலை, தண்டு, காய் அனைத்தும் நன்மை பயப்பவை. ஆனால்..

Various Source

கோவைக்காயில் விட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ், போலிக் ஆசிட் மற்றும் இரும்பு சத்து ஆகியவை உள்ளது.

கோவைக்காயின் நிறம், வடிவத்தை வைத்து மூவிரல் கோவை, ஐவிரல் கோவை, நாம கோவை, கருங்கோவை என பிரிக்கப்படுகிறது.

பரம்பரை சர்க்கரை வியாதி உள்ளவர்கள் முப்பது வயது முதலே கோவைக்காய் சாப்பிட்டால் சர்க்கரை வராமல் தடுக்கலாம்.

கோவைக்காய், பூ, இலை சேர்த்த சாறில் தேன் விட்டு குடிப்பது வயிற்றுப்புண், வாய்ப்புண் மற்றும் அல்சரை குணப்படுத்தும்

கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வாயு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கெல்லாம் முடிவு கட்டும் நல்ல மருந்தாகும்.

கோவை இலையை அரைத்து பூசி குளித்தால் வியர்குரு உள்ளிட்ட தோல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

கோவை கிழங்கு சாறு 10 மி.லி பருகி வந்தால் மார்பு சளி நீங்கும். உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் மலச்சிக்கல் பிரச்சினைக்கு நல்ல பலன் தரும்

கோவைக்காய் எளிதில் ஜீரணமாகாது என்பதால் இரவில் உண்பதை தவிர்க்க வேண்டும்

மூளை ஆரோக்கியத்திற்கு என்ன சாப்பிட வேண்டும்?

Follow Us on :-