உடல் எடையை குறைக்க பலரும் உடற்பயிற்சி, உணவு டயட் ஆகியவற்றை மேற்கொள்கின்றனர். அவ்வாறாக டயட் இருப்பவர்கள் குறிப்பிட்ட சில சாறுகளை பருகுவது அவர்களது டயட்டிற்கு சத்துக்களை அளித்து மிகவும் பயனுள்ளதாய் இருக்கும்.
Various Source
நெல்லிக்காய் சாறில் உள்ள விட்டமின் சி சத்து ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது. கொழுப்பு அளவை குறைக்கிறது.
பாவக்காய் சாறு இதயத்திற்கு நல்லது. சர்க்கரை வியாதில் உள்ளவர்களுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
சோற்றுக் கற்றாழை சாறு ஜீரண உறுப்புகளில் உண்டாகும் அல்சர், அசிடிட்டி உள்ளிட்ட பிரச்சினைகளை குணப்படுத்துகிறது.
சுரைக்காய் சாறு ஹார்மோனை சமநிலை படுத்துவதுடன், சிறுநீர் தொற்றுகளில் இருந்தும் காக்கிறது.
Various Source
தர்ப்பூசணி சாறில் உள்ள அமினோ அமிலங்கள் கொழுப்பை குறைப்பதுடன், உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது.
Various Source
வெள்ளரி சாறில் செரிவாக உள்ள நீர்ச்சத்தும், புரதச்சத்தும் உடலுக்கு தேவையான ஆற்றலை நீட்டிக்க செய்கிறது.