மழைக்காலத்தில் சாப்பிடக் கூடாத உணவுகள்!

மழைக்காலங்களில் நிலவும் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப சில உணவுகளை சாப்பிடுவதும், சில உணவுகளை தவிர்ப்பதும் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும். மழைக்காலத்தில் சாப்பிடக்கூடாத உணவுகள் குறித்து பார்ப்போம்.

Various Source

மழைக்காலங்களில் கடலுக்கு செல்வது குறைவதால் கடல் உணவுகளான மீன், நண்டு, இறால் வரத்தும் குறையும்.

இதனால் ப்ரீசர் மற்றும் ஐஸில் வைக்கப்பட்ட கடல் உணவுகள் அதிகம் விற்கப்படும். அவற்றை உண்பது நல்லதல்ல.

மழைக்காலங்களில் உள்ளூர் ஆறு, குளங்களில் பிடிக்கப்படும் மீன்களை வாங்கி சாப்பிடுவது நல்லது.

கீரை உணவுகள் செரிக்க அதிக நேரம் எடுப்பவை. மழை நாட்களில் செரிமான சக்தி குறைவாக இருக்கும்.

Various Source

அந்த மாதிரியான சமயத்தில் கீரை உணவுகளை சாப்பிட்டால் செரிமான பிரச்சினை, வாந்தி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தலாம்.

Various Source

மழைக் காலங்களில் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடாமல் சூடாக சமைத்த உணவை அப்போதே சாப்பிடுவது நல்லது.

தயிர் உடலை குளிர்ச்சியாக்கும் என்பதால் மழை நேரத்தில் சாப்பிடுவது சளி, காய்ச்சல் பிரச்சினைகளை ஏற்படுத்தலாம்.

கல்லீரலை டீடாக்ஸ் செய்யும் பழங்கள் என்னென்ன?

Follow Us on :-