தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?

பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பு அதிகரிக்க என்னென்ன பொருட்களை உணவில் சேர்க்கலாஅம் என தெரிந்துக்கொள்ளுங்கள்...

Pexels

வெந்தயம் - இதனை பாலில் போட்டு நன்றாக காய்ச்சி சிறிது சர்க்கரை கலந்து பாயாசம் போல செய்து குடித்து வந்தால் தாய்ப்பால் அதிகரிக்கும்.

பேரிச்சம்பழம் - பெண்கள் இதனை குழந்தை பிறப்பதற்கு முன்னும், பிறந்த பின்னும் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.

வெற்றிலை - இதை சாப்பிட்டால் ஜீரண சக்தி அதிகரிப்பதோடு நெருப்பில் காட்டி மார்பகங்களில் வைத்துக்கட்ட தாய்ப்பால் நன்கு சுரக்கும்.

பாகற்காய் - இதன் இலையை அரைத்து மார்பகங்களில் பற்றுப் போட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

பூண்டு - இதனை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதால் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கலாம்.

Pexels

பால் - பிரசவித்த பெண்கள் தினமும் 5 அல்லது 6 கப் பால் குடித்தால் குழந்தைகளுக்கு அதிக அளவு தாய்ப்பால் கிடைக்கும்.

பால்சுறா மீன் - இதனுடன் பூண்டு சேர்த்து சுறாப்புட்டு செய்து உண்டால் பால் சுரப்பு அதிகரிக்கும்.

Pexels

முருங்கை கீரை - இதில் அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. அடிக்கடி உணவுடன் சேர்த்து கொண்டால் தாய்ப்பால் அதிகரிக்கும்.

Pexels

இதைத்திவிர கீரை வகைகள், கேரட், முட்டை, ஓட்ஸ், பழச்சாறுகள், அதிகளவு தண்ணீர் பருகுதலும் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

Pexels

மொறு மொறு ஜவ்வரிசி வடை செய்வது எப்படி?

Follow Us on :-