மணமணக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்யலாமா?
தமிழ்நாட்டு குழம்பு வகைகளில் மிகவும் பிரபலமானது எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு. எளிமையான வழியில் ருசியான எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு செய்வது எப்படி என பார்க்கலாம்.
Various source
தேவையானவை: கத்தரிக்காய், தனியா தூள், மிளகாய் தூள், கறிவேப்பிலை, உப்பு தேவையான அளவு.
1 டீஸ்பூன் சீரகம், தேங்காய் துறுவல், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்த மசாலாவுடன் மிளகாய் தூள், தனியா தூள், உப்பு தேவையான அளவு சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும்.
கத்தரிக்காயை தனித்தனி துண்டுகளாக வெட்டாமல் காம்பை பிடித்து அடிப்பாகத்தில் இருந்து குறுக்கு நெடுக்காக வெட்ட வேண்டும்.
Various source
பின்னர் கத்தரிக்காய்க்குள் தயார் செய்த மசாலா கலவையை திணிக்க வேண்டும்.
கடாயில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை போட்டு தாளித்து, பின்னர் மசாலா தடவிய கத்தரிக்காய்களை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
அதன்பின்னர் மீதமுள்ள மசாலா கலவையை கடாயில் போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி கிரேவியாக கொதிக்க வைக்க வேண்டும்.
நல்ல கொதி வந்ததும் கொத்தமல்லி தழைகளை தூவி இறக்கினால் தளதளக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு தயார்