பலருக்கும் பிரியாணி, குஸ்கா என்றால் விருப்பமான உணவாக இருக்கிறது. சிக்கன், முட்டை இல்லாமல் ஸ்டைல் எம்டி குஸ்காவை ஈஸியாக எப்படி செய்வது என பார்ப்போம்
Various source
தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி, தக்காளி, புதினா, பச்சை மிளகாய், மிளகாய் தூள், தயிர், பெரிய வெங்காயம், பிரிஞ்சி இலை, ஏலக்காய், நட்சத்திர சோம்பு, பட்டை, இஞ்சி பூண்டு பேஸ்ட்
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு பட்டை, கிராம்பு, ஏலக்காய், நட்சத்திர சோம்பு, மராத்தி மொக்கு, பிரிஞ்சி இலை, பெரிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக தாளிக்க வேண்டும்.
அதனுடன் நறுக்கிய புதினா, பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கிவிட்டு இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்க வேண்டும்.
எல்லாம் நன்றாக வதங்கிய பிறகு மிளகாய் தூள் தூவி, தயிரை கொட்டி கிளறி விட வேண்டும்.
Various source
பின்னர் தக்காளி சேர்த்து கொஞ்சமாக தண்ணீர், உப்பு சேர்த்து கிரேவி பதத்திற்கு கொதிக்கவிட வேண்டும்.
பின்னர் பாஸ்மதி அரிசியை கழுவி குக்கரில் வைத்து அதனுடன் நாம் தயாரித்து வைத்த குஸ்கா மசாலாவையும் சேர்த்து மூடி வேகவைக்க வேண்டும்.
சாதம் நன்றாக வெந்ததும் குக்கரை திறந்தால் மாசாலாவும், சாதமும் நன்றாக கலந்து கமகமக்கும் குஸ்கா தயாராக இருக்கும்