உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள், நீர்ச்சத்துக்களை வழங்கக் கூடியவற்றில் பழங்கள் முக்கியமானவை. பழங்களை ஆரோக்கியமான முறையில் சாப்பிட வேண்டும். எப்படியெல்லாம் பழங்களை சாப்பிடக் கூடாது என பார்ப்போம்.
Pixabay
ஒவ்வொரு பழ வகையையும் அதன் சத்துக்கள் குறையாமல் சாப்பிட சில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.
பழங்களில் நீர்ச்சத்து உள்ளது. பழம் சாப்பிட்டதும் தண்ணீர் குடித்தால் செரிமான பிரச்சினை ஏற்படலாம்.
பழங்களை வெட்டிய உடனே சாப்பிட வேண்டும். வெட்டி ஃப்ரிட்ஜில் வைத்து தாமதமாக சாப்பிடுவது ஆரோக்கியமானதல்ல.
பழங்களை வெட்டாமல் வைத்திருந்து தேவையான போது வெட்டி உடனே சாப்பிட்டு விடுவது நல்லது.
Pixabay
பழங்களை சாறு பிழிந்து சாப்பிடுவதை விடவும் கடித்து சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை தரும்.