பாதம், பிஸ்தா, பிரெட் வைத்து சூப்பரான ஷாஹி துக்டா செய்யலாம்!
வட இந்திய பாணி இனிப்பு வகைகளில் மிகவும் சுவையானது ஷாஹி துக்டா. பிரெட், பாதாம், பிஸ்தா, பால் கொண்டு சுவையான சூப்பரான ஷாஹி துக்டா வீட்டிலேயே செய்வது எப்படி என பார்க்கலாம்
Various Source
தேவையான பொருட்கள்: பால், பால் பவுடர், பிரட், சர்க்கரை, குங்குமப்பூ, சோள மாவு, ஏலக்காய் தூள், பாதாம், பிஸ்தா, நெய்
அடுப்பில் கடாயை வைத்து இரண்டரை கப் பால் ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும்.
அதனுடன் கால் கப் பால் பவுடர், சர்க்கரை, கொஞ்சமாக குங்குமப்பூ, ஏலக்காய் பொடியையும் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்
அதனுடன் ஒரு டீஸ்பூன் சோள மாவினை தண்ணீர் சேர்த்து கலந்து ஓரளவு கெட்டியானதும் இறக்கிக் கொள்ள வேண்டும்
பிரெட்டுகளை ஓரங்களை வெட்டிவிட்டு கடாயில் நெய் விட்டு அதில் போட்டு பொறித்து எடுத்துக் கொள்ள வேண்டும்
பொறித்த பிரட் மீது தயார் செய்த பால் மிக்ஸை ஊற்றி நறுக்கிய பாதாம், பிஸ்தா தூவினால் சுவையான ஷாஹி துக்டா தயார்.