தஞ்சை ஸ்பெஷல் அசோகா அல்வா செய்வது எப்படி?

தஞ்சாவூர் டெல்டா பகுதிகளில் பிரபலமான இனிப்பு உணவுகளில் ஒன்றுதான் அசோகா அல்வா. இந்த அசோகா அல்வாவை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: 1 கப் பயத்தம் பருப்பு, 3 கப் சர்க்கரை, கால் கப் கோதுமை மாவு, நெய், முந்திரி, கேசரி பவுடர்

பயத்தம் பருப்பை லேசாக வறுத்து, குக்கரில் வைத்து தண்ணீர் சேர்த்து குழைவாக வேகவிட வேண்டும்

கோதுமை மாவை வாணலியில் போட்டு சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் கோதுமையுடன் வேகவைத்த பயத்தம் பருப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.

பின்னர் அதனுடன் சர்க்கரையும், கேசரி பவுடரும் கலந்து சுருண்டு வரும்வரை நெய் சேர்த்து கிளற வேண்டும்.

கடைசியாக நெய்யில் வறுத்த முந்திரியை சேர்த்து இறக்கினால் சுவையான அசோகா அல்வா தயார்.

பூரி உப்பலாக வர என்ன செய்ய வேண்டும்?

Follow Us on :-