வாணலியில் நெய்விட்டு சேமியாவை வறுக்க வேண்டும். டபுள் ரோஸ்டட் சேமியாவை வறுக்க தேவையில்லை.
பின்னர் வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, பருப்பு, சீரகம், வரமிளகாய், பெருங்காயம், கறிவேப்பிலை இவற்றை போட்டு தாளிக்க வேண்டும்.
அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி பொடியாக் நறுக்கிய கேரட், வெங்காயம் சேர்த்து மிதமான தீயில் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து சேமியாவையும் சேர்த்து கிளற வேண்டும்.
கிளறிய சேமியாவோடு தயிர் மற்றும் அரிசி மாவை தண்ணீர் சேர்த்து கெட்டியாக கிளறி அரை மணி நேரம் வைத்திருக்க வேண்டும்.
பின்னர் இட்லி பாத்திரத்தில் நெய் தடவி சேமியா கலவையை ஒரு கரண்டியில் எடுத்து இட்லி ஊற்றுவது போல ஊற்றி அவித்தால் சுவையான சேமியா இட்லி தயார்.