வெயிலுக்கு குளிர்ச்சியாக சாத்துக்குடி சர்பத் ஈஸியா செய்யலாம்!

வெயில் காலத்தில் பலரும் உடல் அயற்சிக்கும் தாகத்திற்கும் ஆளாகின்றனர். அவ்வாறான சமயங்களில் சாத்துக்குடி சர்பத் குடிப்பது புத்துணர்ச்சியை அளிக்கும். சாத்துக்குடி சர்பத் ஈஸியாக எப்படி செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: சாத்துக்குடி, எலுமிச்சை, சப்ஜா விதைகள், நன்னாரி சர்பத் சிரப், இஞ்சி சிறு துண்டு.

முதலில் சாத்துக்குடியை தோல் உரித்து சுளைகளை எடுத்து கொட்டைகளை நீக்கி மிக்ஸியில் போட்டு உடன் சர்க்கரை மற்றும் சிறுதுண்டு இஞ்சி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அதனுடன் ஒரு பெரிய எலுமிச்சையை பிழித்து சாறு எடுத்து அதை சேர்த்து அரைக்க வேண்டும்.

பின்னர் வடிக்கட்டி எடுத்து அதை தூசுகள் இல்லாமல் ஜூஸாக வடிக்கட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.

Various Source

ஒரு க்ளாஸை எடுத்து அதில் நன்னாரி சிரப் 2 டேபிள் ஸ்பூன் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

Various Source

அதனுடன் நாம் தயாரித்து வைத்துள்ள சாத்துக்குடி சாறை ஊற்றி ஸ்பூனால் நன்கு கலக்க வேண்டும்.

இறுதியாக ஊறவைத்த சப்ஜா விதைகளை அதனுடன் 2 ஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நாகர்கோவில் ஸ்பெஷல் பருப்பு போளி வீட்டிலேயே செய்யலாம்!

Follow Us on :-