மொறுமொறு சூப்பர் சோலா பூரி செய்வது எப்படி?

பூரி போன்றே அளவில் சற்று பெரிதாகவும் மொறுமொறுப்பாகவும் இருப்பது சோலா பூரி. சுவையான மொறுமொறு சோலா பூரி வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என பார்ப்போம்.

Various Source

தேவையான பொருட்கள்: மைதா மாவு, ரவா, தயிர், சர்க்கரை, சோடா உப்பு, நல்லெண்ணெய், கடலெண்ணெய், உப்பு

1 கப் மைதா மாவை சலித்து அதனுடன் 2 ஸ்பூன்ரவா, சர்க்கரை, கால் டீஸ்பூன் சோடா உப்பு, உப்பு தேவையான அளவு சேர்த்து கிளறவும்.

அதனுடன் தயிர் சேர்த்து கிளறிய பின், நல்லெண்ணெய் சேர்த்து பிசிறிக் கொள்ள வேண்டும்.

அதனுடன் வெந்நீர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து பிசைந்து பூரி மாவு பதம் வந்த பின் ஒரு மணி நேரம் மூடி வைக்க வேண்டும்.

Various Source

பின்னர் அதை உள்ளங்கையளவு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி கல்லில் வைத்து நீளமாக தேய்க்க வேண்டும்.

வாணலியில் கடலெண்ணெய் சேர்த்து தேய்த்த மாவை போட்டு பொன்னிறமாக சுட்டு எடுத்தால் சுவையான சோலா பூரி தயார்.

தொட்டுக்கொள்ள சூப்பரான கத்தரிக்காய் துவையல் செய்யலாமா?

Follow Us on :-