சாப்பாட்டிற்கு தொட்டுக் கொள்ள துவையல் வகைகள் செய்வது நம்ம ஊர்களில் ரொம்ப பிரசித்தம். அந்த வகையில் சுவையான கத்தரிக்காய் துவையல் செய்வது எப்படி என பார்ப்போம்.
Various Source
தேவையான பொருட்கள்: கத்தரிக்காய், தக்காளி, சின்ன வெங்காயம், தனியா தூள், சீரகம், புளி, மஞ்சள் தூள், உப்பு
தாளிக்க: கடுகு, சீரகம், இடித்த பூண்டு, வர மிளகாய், கறிவேப்பிலை, கடலைப்பருப்பு,
கத்தரிக்காயை சிறிய துண்டுகளாக வெட்டி உப்பு நீரில் போட்டு வைக்க வேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெட்டிய கத்தரிக்காய் துண்டுகளை போட்டு வதக்கி பின்னர் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கவும்.
Various Source
பின்னர் அதனுடன் இரண்டு துண்டு புளி, மஞ்சள் தூள், கல் உப்பு சேர்த்து 10 நிமிடங்கள் வேகவிட வேண்டும்.
ஒரு வாணலியில் கொத்தமல்லி, சீரகம், வர மிளகாய் போட்டு வதக்கி மிக்ஸியில் போட்டு அடித்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் தயார் செய்து வைத்த கத்தரிக்காய் கலவையை சேர்த்து அரைக்க வேண்டும்.
ஒரு சிறிய பாத்திரத்தில் கடலைப்பருப்பு, கடுகு, சீரகம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அதை மிக்ஸியில் அரைத்தவற்றுடன் கலக்கினால் கத்தரிக்காய் துவையல் தயார்.