தென்னை இளநீர் சுவையானது மட்டுமல்லாமல் உடல் சூட்டை தணித்து நீர்ச்சத்தையும் தருகிறது. இந்த இளநீரை கொண்டு குழந்தைகள் விரும்பும் ஜெல்லி செய்வது எப்படி என பார்க்கலாம்.
Various source
தேவையான பொருட்கள்: இளநீர், கடல்பாசி, உப்பு, சர்க்கரை தேவையான அளவு
கடல்பாசியை நீரில் 10 நிமிடம் ஊற வைத்து ஒரு பாத்திரத்தில் விட்டு வேக வைக்க வேண்டும்.
தண்ணீர் நன்றாக காய்ந்து வந்ததும் அதில் உப்பு, சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்து விட வேண்டும்.
பின்னர் 10 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து விட்டு அதில் இளநீரை சேர்க்க வேண்டும்.
Various source
இளநீர் வழுக்கைகளை நீட்டமாக வெட்டி அதனுடன் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
Various source
பின்னர் ஒரு தட்டில் அவற்றை பரப்பி காய்ந்ததும் சதுரமாக சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
வெட்டிய துண்டுகளை ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் சுவையான ஜில்லென்ற இளநீர் ஜெல்லி தயார்.