கிறிஸ்துமஸ் கேக் வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!
கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட வீட்டிலேயே எளிய முறையில் கேக் செய்வது எப்படி என பார்ப்போம்.
Pixabay
தேவையான பொருட்கள்: மைதா, நாட்டு சர்க்கரை, உலர் பழங்கள், முட்டை, வெண்ணெய், பாதாம், வெண்ணிலா எசன்ஸ்,
தேவையான பொருட்கள்: பேக்கிங் சோடா, தோல் சீவிய ஆரஞ்சு அல்லது எலுமிச்சை, ஏலக்காய், கிராம்பு, பட்டை, உப்பு தேவையான அளவு
முதலில் வெண்ணெய்யை நாட்டு சர்க்கரையுடன் நன்றாக கலந்து அதனுடன் முட்டையை உடைத்து ஊற்றி கலக்க வேண்டும்.
பின் அதனுடன் மைதா மாவு, பேக்கிங் சோடா, வெண்ணிலா எசன்ஸ் ஆகியவற்றையும் சேர்த்து கிளற வேண்டும்.
Pixabay
இறுதியாக உலர்ந்த பழங்கள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
Pixabay
பின்னர் அதை வட்டமான பாத்திரத்தில் கொட்டி அதன் மேல் சீவிய பாதாமை தூவி விட வேண்டும்.
பின்னர் ஓவனில் வைக்க வேண்டும். ஓவன் இல்லாவிட்டால் குக்கரில் அடியில் உப்பு கொட்டி அதன் மீது பாத்திரத்தை வைத்து மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.
50 நிமிடங்கள் கழித்து திறந்து பார்த்தால் கேக் புசுபுசுவென்று உப்பி வந்திருக்கும்.
lifestyle
சியா விதைகளை சரியாக பருகுவது எப்படி?
Follow Us on :-
சியா விதைகளை சரியாக பருகுவது எப்படி?