சுவையான செட்டிநாடு பலாக்காய் மசாலா செய்வது எப்படி?
தமிழ்நாட்டு உணவுகளில் செட்டிநாடு உணவுகள் ரொம்பவே பிரசித்தி பெற்றவை. அதிலும் பலாக்காய் வைத்து செய்யும் மசாலா உணவு ரொம்ப பிரபலம். சுவையான பலாக்காய் மசாலா வீட்டிலேயே செய்யலாமா..
Various source
தேவையான பொருட்கள்: பலாக்காய் பிஞ்சு, பெரிய வெங்காயம், வரமிளகாய், தக்காளி தேங்காய்பூ, கசகசா, சோம்பு, சீரகம், மஞ்சள் தூள், உப்பு
பலாக்காயை தோல் சீவி சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதில் உப்பு, மஞ்சள் சேர்த்து நன்றாக வேக வைக்க வேண்டும்.
வரமிளகாய், தேங்காய் துறுவல், கசகசாவை விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
Various source
கடாயில் எண்ணெய் விட்டு சோம்பு, சீரகம் தாளித்து மசாலா தூள் சேர்த்து வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
Various source
இதனுடன் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து சிறிது நேரம் வதக்கி பின்னர் வேகவைத்த பலாக்காயை சேர்த்து கிளற வேண்டும்.
மசாலா பலாக்காயில் நன்றாக சேர்ந்ததும் இறக்கினால் சுவையான பலாக்காய் மசாலா தயார்.