சர்க்கரை நோயாளிகள் சிக்கனை எப்படி சமைத்து சாப்பிடனும்?

நீரிழிவு நோயாளிகள் டயட்டில் சிக்கனை சேர்த்துக் கொள்வது பாதுகாப்பானதா, ஆரோக்கியமானதா என தெரிந்துக்கொள்ளுங்கள்...

Pexels

மெலிந்த புரதங்களால் நீரிழிவு நோயாளிகளுக்கு பெரிய அளவில் ஆபத்துகள் இருப்பதில்லை. ஆனால் சிவப்பு இறைச்சியை உண்ணும் போது கவனம் தேவை.

டைப் 2 நீரிழிவு நோயாளிகள் சிவப்பு இறைச்சியை தவிர்த்து விட்டு சிக்கனை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாம். ஆனால் அதை எப்படி சமைத்து சாப்பிடுகிறோம், எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பதிலும் கவனம் தேவை.

சிக்கன் சூப்பில் கிளைசெமிக் குறியீடு மிக மிகக் குறைவு, எனவே சிக்கனை சூப் வடிவில் எடுத்துக் கொள்வது சிறந்தது.

எண்ணெயில் பொரித்த கபாப், ஃபிரைடு சிக்கன் வகைகளை தவிர்த்து வேகவைத்தோ அல்லது க்ரில் செய்தோ எடுத்துக் கொள்ளலாம்.

Pexels

தோல் நீக்கிய, எலும்பில்லாத சிக்களை தேர்வு செய்து சமைத்து உண்பது சிறப்பு, ஏனெனில் இதில் கொழுப்புச்சத்து மிகக் குறைவாக இருக்கும்.

Pexels

நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் எடை குறைக்க நினைத்தால் எடையை குறைக்க மிகச்சிறந்த புரோட்டீன் தேர்வாக சிக்கன் இருக்கும்.

Pexels

ரத்த அழுத்தம் குறைய என்ன சாப்பிடலாம்?

Follow Us on :-