மலச்சிக்கலால் அவஸ்தை: எப்படி சரி செய்வது?

குழந்தைகளுக்கு ஏற்படும் மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுபட என்னென்ன உணவுகளை கொடுக்கலாம் என பார்ப்போம்...

Pexels

குழந்தைகளுடைய உணவுப் பழக்கம் தான் மலச்சிக்கல் பிரச்சினைக்கு முதன்மையான காரணமாக விளங்குகிறது.

மலச்சிக்கல் பிரச்சினையை தீர்க்க நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வது அவசியம்.

ஆப்பிள், வாழைப்பழம், பச்சை பட்டாணி உள்ளி்ட்டவற்றை குழந்தைகளின் தினசரி உணவில் சேர்க்கலாம்.

உடலை அதிக அளவு நீர்ச்சத்துடன் வைத்துக் கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முடியும்.

குழந்தைகள் ஜங்க் உணவுகள் சாப்பிடுவதால் நீரிழப்பு ஏற்படும். எனவே இதை தவிர்க்கவும்.

Pexels

அத்திப்பழத்தில் உள்ள நார்ச்சத்துக்கள் ஜீரண மண்டலத்தின் செயல்பாடுகளை மேம்படுத்தி மலச்சிக்கல் சீர் செய்யும்.

Pexels

புதினா மலச்சிக்கலால் ஏற்படும் வயிறு மந்தம், வயிறு வீக்கம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி வயிறுக் கோளாறுகளை சரி செய்யும்.

Pexels

உலர் திராட்சையில் உள்ள நார்ப்பொருள் ஜீரண ஆற்றலை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தீர்க்க உதவி செய்யும்.

Pexels

எள் உருண்டை, நல்லெண்ணெய் ஆகியவற்றை குழந்தைகளின் உணவில் சேர்க்க இவை மலச்சிக்கலைத் தீர்க்கும்.

Pexels

ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள அதீத நன்மைகள்!

Follow Us on :-