நாட்டுக் கோழி முட்டை சாப்பிடுவதில் உள்ள நன்மைகள்!

அன்றாடம் வாழ்வில் உடலுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதில் கோழி முட்டை முக்கியமான பங்கு வகிக்கிறது. பிராய்லர் கோழி முட்டை, நாட்டுக்கோழி முட்டை இரண்டிலுமே பல சத்துக்கள் உள்ளன.

Various Source

எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கும் செலுனியம் என்ற பொருள் முட்டையில் அதிகம் நிறைந்துள்ளது.

ஓமேகா 3 முட்டையில் அதிகம் இருப்பதால் இதய பிரச்சனைகள் வராமல் காக்கிறது. எலும்புகளுக்கு முட்டை வலிமையை தரும்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஓய்வில் இருப்பவர்களுக்கு நாட்டு கோழி முட்டை சிறந்த நோய் கால உணவாக இருக்கிறது

நாட்டு கோழி முட்டையில் மெலனின் புரத சத்து அதிகம் உள்ளது. அடிக்கடி நாட்டு முட்டை சாப்பிட்டு வருபவர்களுக்கு தலைமுடி மற்றும் நகங்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

உடலுக்குத் தேவையான ஏழு அமினோ அமிலங்களும் முட்டையில் மட்டுமே அடங்கியுள்ளன.

Various Source

மூளை மற்றும் நரம்பு மண்டலம் திறம்பட செயல்பட வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் முட்டைகளில் உள்ளன.

தினமும் முட்டை சாப்பிடுவதால் அதில் உள்ள வைட்டமின்கள் கண்புரை நோய், கண் நோய் ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது.

இயற்கை சூழலில் வளரும் கோழி முட்டையை பயன்படுத்துவது ஆரோக்கியத்திற்கு நல்லது.

கிறிஸ்துமஸ் கேக் வீட்டிலேயே ஈஸியா செய்யலாம்!

Follow Us on :-