காலை, இரவு நேரங்களில் அதிகமானோர் விரும்பி உண்ணுவது இட்லி, தோசை போன்ற டிபன் வகைகள்தான். இட்லி, தோசைக்கு விதவிதமான சட்னிகள் செய்து சாப்பிடுவது ருசியை அளிப்பது மட்டுமல்லாமல் நல்ல ஆரோக்கியத்தையும் தரும். ஆரோக்கியம் தரும் சட்னிகள் குறித்து பார்ப்போம்.
Various Source
புதினா சட்னி நல்ல மனத்தை தருவதுடன் வாயு பிரச்சினைகளையும் தீர்க்கிறது.
கொத்தமல்லி சட்னி விட்டமின் சி நிறைந்தது. இது உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற உதவுகிறது.
கறிவேப்பிலை சட்னியை தொட்டுக் கொள்வது செரிமான பிரச்சினைகள், மலச்சிக்கலை தீர்க்கும்.
உளுந்து துவையல் சாப்பிடுவதால் உடலில் கொழுப்பின் அளவை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
தேங்காய் சட்னி சாப்பிடுவதால் முடி உதிர்வு பிரச்சினைகள், சரும பிரச்சினைகளில் பாதுகாப்பு பெறலாம்.
எள் துவையல் உணவில் சேர்த்துக் கொள்வது செரிமான கோளாறை சரி செய்வதுடன், ஞாபக மறதி பிரச்சினைகளை தீர்க்கிறது.
பருப்பு துவையல் உணவில் சேர்த்துக் கொள்வது கருப்பை பிரச்சினை, ரத்த சோகை பிரச்சினைகளை தீர்க்க உதவும்.