கேரளாவில் பிரபலமாக உள்ள உணவுகளில் ஒன்று நேந்திரம் பழத்தை வைத்து செய்யப்படும் பழம் பொரி. சுவையான கேரளா ஸ்பெஷல் பழம் பொரியை வீட்டிலேயே செய்வது எப்படி என பார்ப்போம்
Various Source
தேவையான பொருட்கள்: மைதா மாவு, நேந்திரம் பழம், சர்க்கரை, அரிசி மாவு, மஞ்சள் தூள், தேங்காய் எண்ணெய், உப்பு
10 நேந்திரம் பழத்தை எடுத்து கழுவி தோல் சீவி பஜ்ஜிக்கு சீவுவது போல நீளமாக சீவிக் கொள்ள வேண்டும்.
அரைக்கிலோ மைதா மாவுடன் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 4 டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கிளறவும்.
அதனுடன் உப்பு, மஞ்சள் தூள் தேவையான அளவு சேர்த்து தண்ணீர் ஊற்றி கெட்டியாக கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கடாயில் சுத்தமான தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.
சீவிய நேந்திரம் பழத்தை எடுத்து மாவில் பிரட்டி எடுத்து எண்ணெய்யில் போட்டு பொறித்து எடுத்தால் சுவையான பழம் பொரி தயார்.