அந்த விஷயத்தை பண்ணியே தீருவேன்! முடிவில் பின்வாங்காத சமந்தா!
சமீப காலமாக மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ள சமந்தா எடுத்த முடிவு!
Instagram
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முக்கியமான நடிகையாக உள்ளவர் சமந்தா.
முன்னதாக தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்திருந்த சமந்தா பின்னர் விவாகரத்து செய்து கொண்டார்.
சமீபத்தில்தான் சமந்தாவுக்கு மயோசிடிஸ் நோய் பாதிப்பு இருப்பதாக அவர் மூலமாகவே தெரிய வந்தது.
யசோதா பட டப்பிங் பணிகளுக்காக அவர் வீல் சேரில் வந்திருந்த புகைப்படம் பெரும் அதிர்ச்சியை அளித்தது.
இதுகுறித்து பேசிய அவர் “எத்தனையோ பிரச்சினைகளில் இருந்து மீண்ட நான் இந்த பிரச்சினைகளில் இருந்தும் மீள்வேன்..”
”.. ஒருமுறை நான் எதையாவது முடிவு செய்தால் அதை செய்தே தீருவேன். உயிரை கொடுத்து நடித்த படத்தில் சொந்தமாகவே டப்பிங் பேச விரும்பியதால் அதை செய்தேன்” எனக் கூறியுள்ளார்.
சமந்தா இந்த நோய் பிரச்சினையிலிருந்து மீண்டு வர பலரும் அவருக்கு ஆறுதலாக பேசி வருகின்றனர்.