சினிமாவுக்கு டாடா பைபை ? சமந்தா முடிவும் மேனேஜர் விளக்கமும்...

நடிகை சமந்தா உடல்நிலை காரணமாக பாலிவுட் படங்களில் இருந்து பின்வாங்கியுள்ளதாக தகவல்.

Twitter

நடிகை சமந்தா தெலுங்கு, தமிழ் என பிரபலமாக இருந்த நிலையில் பாலிவுட் படங்களில் பிஸியாகினார்.

இந்நிலையில் திடீரென அவருக்கு மயோசிடிஸ் என்ற ஒரு வகை ஆட்டோ இம்யூன் நோய் ஏற்பட்டது.

உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வருவதால் உடல் நலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்க சமந்தா முடிவு செய்துள்ளார்.

இதனால் அவர் ஒப்பந்தமாகி இருந்த சில பாலிவுட் படங்களில் இருந்து விலகியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

அதேசமயம் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்து வரும் 'குஷி' படத்தினை மட்டும் முடித்துக்கொடுக்க திட்டமிட்டுள்ளாராம்.

Twitter

உடல் நலம் முழுமையாகக் குணமடைந்த பின்னர் மீண்டும் ரீஎண்ட்ரி கொடுப்பார் என எதிர்ப்பார்க்கபப்டுகிறது.

Twitter

இது குறித்து சமந்தாவின் மேனேசர் மகேந்திரா கூறியதாவது, படப்பிடிப்புகள் 6 மாதங்களுக்கு தள்ளிப்போடப்பட்டுள்ளன.

Twitter

சமந்தா தற்போது ஓய்வெடுத்து வருகிறார். அவர் எந்த ஒப்பந்தத்தில் இருந்தும் பின்வாங்கவில்லை என தெளிவுபடுத்தியுள்ளார்.

Twitter

இந்த வருடத்தின் டாப் 10 வசூல் படங்கள்! வசூல் மன்னன் யார்?

Follow Us on :-